بَشِيرًا وَنَذِيرًا فَأَعْرَضَ أَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இந்த வேதம்) நற்செய்தி கூறக்கூடியதும், அச்சமூட்டி எச்சரிக்கக் கூடியதும் ஆகும். அவர்களில் அதிகமானோர் (இதை) புறக்கணித்தனர். இன்னும் அவர்கள் (அதை) செவியேற்பதில்லை.
Tamil Translation - Omar Sharif(இந்த வேதம்) நற்செய்தி கூறக்கூடியதும், அச்சமூட்டி எச்சரிக்கக் கூடியதும் ஆகும். ஆக, அவர்களில் அதிகமானோர் (இதை) புறக்கணித்தனர். ஆக, அவர்கள் (இதன் நல்லுபதேசங்களை) செவியுறுவதில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi4. (நல்லோருக்கு இது) நற்செய்தி கூறுகிறதாகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறதாகவும் இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதைப்) புறக்கணித்து விட்டனர். ஆதலால், அவர்கள் இதற்கு செவி சாய்ப்பதில்லை.