وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَنَّكَ تَرَى ٱلْأَرْضَ خَٰشِعَةً فَإِذَآ أَنزَلْنَا عَلَيْهَا ٱلْمَآءَ ٱهْتَزَّتْ وَرَبَتْ إِنَّ ٱلَّذِىٓ أَحْيَاهَا لَمُحْىِ ٱلْمَوْتَىٰٓ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக நிச்சயமாக நீர் பூமியை காய்ந்ததாக பார்க்கின்றீர். பிறகு, அதன் மீது நாம் (மழை) நீரை இறக்கினால் அது செழிப்படைகிறது, வளர்கிறது. நிச்சயமாக அதை உயிர்ப்பித்தவன்தான் மரணித்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக நீர் பூமியை காய்ந்ததாக பார்க்கிறீர். பிறகு, அதன் மீது நாம் (மழை) நீரை இறக்கினால் அது செழிப்படைந்து நன்கு வளர்கிறது. இது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். நிச்சயமாக அதை உயிர்ப்பித்தவன்தான் மரணித்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi39. (நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீர்காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன் மீது நாம் மழையை இறக்கினால், அது (செடி கொடிகளால்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்து போன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன்தான் மரணித்தவர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) பேராற்றலுடையவன்.