فَإِنِ ٱسْتَكْبَرُوا۟ فَٱلَّذِينَ عِندَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُۥ بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَهُمْ لَا يَسْـَٔمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் பெருமையடித்து விலகினால் (நீர் கவலைப்படாதீர்) உமது இறைவனிடம் இருக்கின்ற(வான)வர்கள் அவனை இரவிலும் பகலிலும் துதிக்கின்றனர்; அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் பெருமையடித்து விலகினால் (நீர் கவலைப்படாதீர்), உமது இறைவனிடம் இருக்கின்ற(வான)வர்கள் அவனை இரவிலும் பகலிலும் துதிக்கிறார்கள். இன்னும், அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. ஆகவே (நபியே!) இவர்கள் கர்வம் (கொண்டு இறைவனை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், (அதனால் அவனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.) உங்கள் இறைவனிடத்தில் உள்ளவர்(களாகிய வானவர்)கள் இரவும் பகலும் அவனைத் துதி செய்து புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (இதில்) அவர்கள் சோர்வடைவதே இல்லை.