caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Fussilat அத்தியாயம், வசனம் 40

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 61 · 41:40

إِنَّ ٱلَّذِينَ يُلْحِدُونَ فِىٓ ءَايَٰتِنَا لَا يَخْفَوْنَ عَلَيْنَآ أَفَمَن يُلْقَىٰ فِى ٱلنَّارِ خَيْرٌ أَم مَّن يَأْتِىٓ ءَامِنًا يَوْمَ ٱلْقِيَٰمَةِ ٱعْمَلُوا۟ مَا شِئْتُمْ إِنَّهُۥ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நமது வசனங்களில் (சத்தியத்தை விட்டு) தடம் புரளுபவர்கள் நம்மீது மறைந்துவிட மாட்டார்கள். நரகத்தில் போடப்படுபவர் சிறந்தவரா அல்லது மறுமை நாளில் நிம்மதி பெற்றவராக வருகின்றவரா? நீங்கள் (விரும்பி) நாடியதை செய்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நமது வசனங்களில் (குழப்பம் செய்து சத்தியத்தை விட்டு) தடம் புரளுகிறவர்கள் நம்மிடம் மறைந்துவிட மாட்டார்கள். ஆக, யார் நரகத்தில் போடப்படுபவரோ அவர் சிறந்தவரா? அல்லது, மறுமை நாளில் பாதுகாப்பு பெற்றவராக வருகிறவரா? நீங்கள் நாடியதை செய்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை உற்று நோக்குகிறவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களில் தப்பர்த்தங்களை(த் தங்கள் தீய செயல்களுக்கு ஆதாரமாக)க் கற்பிக்கிறார்களோ, அவர்களுடைய செயல்களில் (ஒன்றுமே) நிச்சயமாக நமக்குமறைந்து விடாது. மறுமையில் நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது பயமற்றவனாக(ச் சொர்க்கத்திற்கு) வருபவன் மேலானவனா? (மனிதர்களே!) நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அவன் உற்று நோக்குகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70