caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Fussilat அத்தியாயம், வசனம் 21

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 61 · 41:21

وَقَالُوا۟ لِجُلُودِهِمْ لِمَ شَهِدتُّمْ عَلَيْنَا قَالُوٓا۟ أَنطَقَنَا ٱللَّهُ ٱلَّذِىٓ أَنطَقَ كُلَّ شَىْءٍ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்களுடைய தோல்களிடம் “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள் என்று கூறுவார்கள்.” அதற்கு அவை கூறும்: எல்லாவற்றையும் பேசவைத்த அல்லாஹ்தான் எங்களையும் (இன்று) பேச வைத்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகப் படைத்தான். அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் தங்களுடைய தோல்களிடம், “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்” என்று கூறுவார்கள். அதற்கு அவை கூறும்: “எல்லாவற்றையும் பேசவைத்த அல்லாஹ்தான் எங்களையும் (இன்று) பேச வைத்தான்.” (மனிதர்களே!) அவன்தான் உங்களை முதல் முறையாகப் படைத்தான். இன்னும் அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, ‘‘எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?'' என்று கேட்பார்கள். அதற்கு அவை, ‘‘எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்'' என்றும் அவை கூறும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70