وَمَا كُنتُمْ تَسْتَتِرُونَ أَن يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَآ أَبْصَٰرُكُمْ وَلَا جُلُودُكُمْ وَلَٰكِن ظَنَنتُمْ أَنَّ ٱللَّهَ لَا يَعْلَمُ كَثِيرًا مِّمَّا تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கு எதிராக உங்கள் செவியும் உங்கள் பார்வைகளும் உங்கள் தோல்களும் சாட்சி கூறிவிடும் என்பதற்காக நீங்கள் (உங்கள் செயல்களை) மறைப்பவர்களாக இருக்கவில்லை. (உங்கள் செயல்களை மறைக்கவும் உங்களால் முடியாது.) என்றாலும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதில் அதிகமானதை அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணினீர்கள்.
Tamil Translation - Omar Sharifஉங்களுக்கு எதிராக உங்கள் செவியும் உங்கள் பார்வைகளும் உங்கள் தோல்களும் சாட்சி கூறிவிடும் என்பதற்காக நீங்கள் (உங்கள் செயல்களை) மறைப்பவர்களாக இருக்கவில்லை. (ஏனெனில் உங்களுக்கு மறுமை நம்பிக்கை இல்லை. இன்னும், உங்கள் செயல்களை மறைக்கவும் உங்களால் முடியாது.) என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதில் அதிகமானதை அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணினீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. உங்கள் செவிகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் (உங்கள் பாவங்களை அவற்றை விட்டும்) மறைக்க முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்.