caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 34

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:34

وَلَقَدْ جَآءَكُمْ يُوسُفُ مِن قَبْلُ بِٱلْبَيِّنَٰتِ فَمَا زِلْتُمْ فِى شَكٍّ مِّمَّا جَآءَكُم بِهِۦ حَتَّىٰٓ إِذَا هَلَكَ قُلْتُمْ لَن يَبْعَثَ ٱللَّهُ مِنۢ بَعْدِهِۦ رَسُولًا كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக இதற்கு முன்னர் உங்களிடம் (பல) தெளிவான அத்தாட்சிகளுடன் யூஸுஃப் வந்தார். ஆனால், அவர் உங்களிடம் எதைக் கொண்டுவந்தாரோ அதில் நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள். இறுதியாக, அவர் இறந்துவிட்ட போது அவருக்கு பின்னர் ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் என்று கூறினீர்கள். இவ்வாறுதான் எவர் வரம்புமீறுபவராகவும் சந்தேகம் கொள்பவராகவும் இருப்பாரோ அவரை அல்லாஹ் வழிகெடுப்பான்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக இதற்கு முன்னர் உங்களிடம் (பல) தெளிவான அத்தாட்சிகளுடன் யூஸுஃப் வந்தார். ஆக, அவர் உங்களிடம் எதைக் கொண்டுவந்தாரோ அதில் நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள். இறுதியாக, அவர் இறந்துவிட்டபோது அவருக்கு பின்னர் ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் என்று கூறினீர்கள். இவ்வாறுதான், எவர் எல்லை மீறி பாவம் செய்பவராகவும் சந்தேகம் கொள்பவராகவும் இருப்பாரோ அவரை அல்லாஹ் வழிகெடுப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. இதற்கு முன்னரும், யூஸுஃப் (நபி) மெய்யாகவே தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்தார். அவர் இறந்துவிடும் வரை, அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகித்துக் கொண்டே இருந்தீர்கள். அவர் இறந்த பின்னரோ, (அவரைப் போற்றிப் புகழ்ந்து, இத்தகைய) ஒரு தூதரை அவருக்குப் பின்னர் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் (என்று கூற முற்பட்டீர்கள்). வரம்பு மீறி (உங்களைப் போல) சந்தேகிப்பவர்களை இவ்வாறே அல்லாஹ் வழிகெடுத்து விடுகிறான்.'' என்றும் கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70