caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 35

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:35

ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِىٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيْرِ سُلْطَٰنٍ أَتَىٰهُمْ كَبُرَ مَقْتًا عِندَ ٱللَّهِ وَعِندَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் தங்களிடம் வந்த எவ்வித ஆதாரமின்றி அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கின்றார்கள். அல்லாஹ்விடமும் நம்பிக்கையாளர்களிடமும் (இவர்களது செயல்) மிகப் பெரிய கோபத்திற்குரியது. இவ்வாறுதான் பெருமை அடிக்கின்றவர்கள் அநியாயக்காரர்கள் எல்லோருடைய உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரை இடுகின்றான்.
Tamil Translation - Omar Sharifஇவர்கள் தங்களுக்கு வந்த ஆதாரமின்றி அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கிறார்கள். அல்லாஹ்விடமும் நம்பிக்கையாளர்களிடமும் (இவர்களது செயல்) மிகப் பெரிய கோபத்திற்குரியது. இவ்வாறுதான் பெருமை அடிப்பவர்கள், அநியாயக்காரர்கள் எல்லோருடைய உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரை இடுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi35. எவர்கள் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறக்கூடிய ஓர் ஆதாரமுமின்றியே, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கிறார்களோ... (அவர்கள் நஷ்டமடைந்து விடுவார்கள்). ஏனென்றால், இது அல்லாஹ்விடத்திலும், நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் பெரும் அருவருப்பானதாகும். இவ்வாறே, பெருமை கொள்ளும் வம்பர்களின் உள்ளங்களிலெல்லாம் முத்திரையிட்டு விடுகிறான்'' (என்றும் அவர் கூறினார்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70