يَوْمَ تُوَلُّونَ مُدْبِرِينَ مَا لَكُم مِّنَ ٱللَّهِ مِنْ عَاصِمٍ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்புகின்ற நாளில் உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து பாதுகாக்கக்கூடிய எவரும் இருக்க மாட்டார். அல்லாஹ் எவரை வழிகெடுத்தானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை.
Tamil Translation - Omar Sharifஅந்நாளில் நீங்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து (உங்களை) பாதுகாப்பவர் எவரும் இருக்க மாட்டார். யாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi33. நீங்கள் (வேதனைக்குப் பயந்து) புறங்காட்டி ஓடும் அந்நாளில், அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றக் கூடியவர் ஒருவரும் இருக்க மாட்டார். அல்லாஹ் எவனை வழி கெடுத்து விடுகிறானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.