لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ وَلِلنِّسَآءِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ نَصِيبًا مَّفْرُوضًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபெற்றோர், நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து ஆண்களுக்கு ஒரு பாகமுண்டு. இன்னும் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து, அது குறைந்திருந்தாலும் அல்லது அதிகமாக இருந்தாலும் அதில் கடமையாக்கப்பட்ட பாகமாக பெண்களுக்கு ஒரு பாகமுண்டு.
Tamil Translation - Omar Sharifபெற்றோரும் நெருங்கிய உறவினர்களும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து ஆண்களுக்கு பங்குண்டு. (அவ்வாறே) பெற்றோரும் நெருங்கிய உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து பெண்களுக்கு பங்குண்டு. அ(வர்கள் விட்டுச் சென்ற)து, குறைவாக இருந்தாலும் சரி; அல்லது, அதிகமாக இருந்தாலும் சரி. அந்த பங்குகள் எல்லாம் அளவு நிர்ணயம் செய்யப்பட்டவை ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. (இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வான்ற) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில், அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்தபோதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும்.