caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 8

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:8

وَإِذَا حَضَرَ ٱلْقِسْمَةَ أُو۟لُوا۟ ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينُ فَٱرْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا۟ لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபங்கு வைக்கும்போது உறவினர்கள், அனாதைகள், ஏழைகள் வந்தால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுங்கள். இன்னும் அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லைக் கூறுங்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பங்கு வைக்கப்படும்போது உறவினர்கள், அனாதைகள், ஏழைகள் (அங்கு) வந்தால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும் தானமாக) கொடுங்கள். இன்னும், (கொடுக்க முடியவில்லை என்றால்) அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லை சொல்லுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறி (அனுப்பி)விடுங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70