فَمِنْهُم مَّنْ ءَامَنَ بِهِۦ وَمِنْهُم مَّن صَدَّ عَنْهُ وَكَفَىٰ بِجَهَنَّمَ سَعِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் அ(வ்வேதத்)தை நம்பிக்கைகொண்டவரும் உண்டு. அவர்களில் அதைவிட்டு (பிறரைத்) தடுத்தவரும் உண்டு. கொழுந்து விட்டெரியும் நெருப்பால் நரகமே போதுமாகும்.
Tamil Translation - Omar Sharifஆக, இ(ந்த வேதத்)தை நம்பிக்கை கொண்டவரும் அவர்களில் இருக்கிறார். இன்னும், இதை புறக்கணித்து விலகி சென்றவரும் அவர்களில் இருக்கிறார். (அவர்களை தண்டிப்பதற்கு) கொழுந்து விட்டெரியும் நெருப்பால் நரகமே போதுமானதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi55. அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றவர்கள் அதை நிராகரித்து விட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே தகுமா(ன கூலியா)கும்.