أَمْ يَحْسُدُونَ ٱلنَّاسَ عَلَىٰ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ فَقَدْ ءَاتَيْنَآ ءَالَ إِبْرَٰهِيمَ ٱلْكِتَٰبَ وَٱلْحِكْمَةَ وَءَاتَيْنَٰهُم مُّلْكًا عَظِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது மக்களைப் பற்றி அல்லாஹ் அவர்களுக்கு தன் அருளிலிருந்து கொடுத்ததின் மீது பொறாமை கொள்கிறார்களா? திட்டமாக இப்ராஹீமுடைய குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம். பெரிய ஆட்சியையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
Tamil Translation - Omar Sharifஅல்லது, மக்கள் மீது (-நபியின் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும்) - அல்லாஹ் அவர்களுக்கு தன் அருளிலிருந்து கொடுத்ததிற்காக - பொறாமைப்படுகிறார்களா? ஆக, திட்டமாக (இதற்கு முன்னர்) இப்ராஹீமுடைய குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம். பெரிய ஆட்சியையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi54. அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு தன் அருளை வழங்கியுள்ளதைப் பற்றி இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? நிச்சயமாக நாம் இப்ராஹீமுடைய சந்ததிகளுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்து, அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.