إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَٰهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا۟ ٱلْعَذَابَ إِنَّ ٱللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக, நம் வசனங்களை நிராகரித்தவர்களை நரக நெருப்பில் எரிப்போம். அவர்கள் வேதனையைத் (தொடர்ந்து) சுவைப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கனிந்து விடும்போதெல்லாம் அவர்களுக்கு அவை அல்லாத (வேறு) தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, ஞானவானாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் நம் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களை நரக நெருப்பில் நாம் எரிப்போம். அவர்கள் தண்டனையைத் (தொடர்ந்து) சுவைப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கனிந்து (உருகி) விடும்போதெல்லாம் அவர்களுக்கு அவை அல்லாத (வேறு புதிய) தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi56. எவர்கள் நம் (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கருகி விடும்போதெல்லாம் வேறு புதிய தோல்களை மாற்றிக்கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.