وَلَيْسَتِ ٱلتَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ حَتَّىٰٓ إِذَا حَضَرَ أَحَدَهُمُ ٱلْمَوْتُ قَالَ إِنِّى تُبْتُ ٱلْـَٰٔنَ وَلَا ٱلَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُو۟لَٰٓئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகெட்டவைகளைச் செய்பவர்கள், அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்தால் "இப்போது நிச்சயமாக நான் (அவற்றை விட்டு) திருந்தி (மன்னிப்புக் கேட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பி) விடுகிறேன்'' என்று கூறுபவருக்கும், நிராகரிப்பாளர்களாக இறந்து விடுபவர்களுக்கும் பிழைபொறுப்பு இல்லை. இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை ஏற்படுத்தினோம்.
Tamil Translation - Omar Sharifபாவங்களைச் செய்பவர்கள், அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், “இப்போது நிச்சயமாக நான் (அவற்றை விட்டு) திருந்தி (மன்னிப்புக் கேட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பி) விடுகிறேன்’’ என்று கூறுபவர்களுக்கும், நிராகரிப்பாளர்களாக இறந்து விடுபவர்களுக்கும் தவ்பா - பிழைபொறுப்பு கிடைக்காது. துன்புறுத்தும் தண்டனையை இவர்களுக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi18. எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது ‘‘இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்'' என்று கூறுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்துவிட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.