caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 17

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:17

إِنَّمَا ٱلتَّوْبَةُ عَلَى ٱللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ ٱلسُّوٓءَ بِجَهَٰلَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُو۟لَٰٓئِكَ يَتُوبُ ٱللَّهُ عَلَيْهِمْ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்விடம் மன்னிப்பெல்லாம் அறியாமையினால் தீமையைச் செய்து பிறகு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்புகிறவர்களுக்குத்தான். அல்லாஹ் அவர்கள் மீது பிழை பொறுப்பான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்விடம் தவ்பா அங்கீகரிக்கப்படுவதெல்லாம் அறியாமையினால் பாவத்தைச் செய்து பிறகு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்புகிறவர்களுக்குத்தான். ஆக, அல்லாஹ் அவர்களது தவ்பாவை அங்கீகரி(த்து அவர்களை மன்னி)ப்பான். இன்னும், அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கி விடுகிறார்களோ அவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70