caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 173

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:173

فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِۦ وَأَمَّا ٱلَّذِينَ ٱسْتَنكَفُوا۟ وَٱسْتَكْبَرُوا۟ فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு (முழுமையாக) நிறைவேற்றுவான், இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு அதிகப்படுத்துவான். எவர்கள் திமிருபிடித்து பெருமையடித்தார்களோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு (வேறு) பாதுகாவலரையும் உதவியாளரையும் (அங்கு) காண மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு (முழுமையாக) நிறைவேற்றுவான், இன்னும், தன் அருளிலிருந்து (வேண்டியளவு) அவர்களுக்கு அதிகப்படுத்துவான். ஆக, எவர்கள் திமிருபிடித்து பெருமையடித்தார்களோ அவர்களைத் துன்புறுத்தும் தண்டனையால் அவன் தண்டிப்பான். இன்னும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு (வேறு) பாதுகாவலரையும் உதவியாளரையும் (அங்கு) காண மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi173. ஆகவே, எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற் செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு முழுமையாக அளித்து, தன் அருளால் மென்மேலும், அவர்களுக்கு அதிகப்படுத்துவான். எவர்கள் கர்வம் கொண்டு (அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைக்) குறைவாகக் காண்கின்றனரோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குத் துணை புரிபவர்களையும் உதவி புரிபவர்களையும் (அங்கு) அவர்கள் காணமாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70