لَّا يُحِبُّ ٱللَّهُ ٱلْجَهْرَ بِٱلسُّوٓءِ مِنَ ٱلْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅநீதியிழைக்கப்பட்டவரைத் தவிர (மற்றவர் எவரும் தனக்கு இழைக்கப்பட்ட) பேச்சில் தீமையைப் பகிரங்கப்படுத்தி பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, நன்கறிபவனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharif(யாரும்) கெட்டதைப் பகிரங்கப்படுத்தி பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான், அநீதியிழைக்கப்பட்டவரைத் தவிர. (அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்து சொல்லலாம்.) அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, நன்கறிபவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi148. அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர (மற்றெவரும் யாரைப் பற்றியும்) பகிரங்கமாகக் (கூச்சலிட்டுக்) குற்றம் கூறுவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ் செவியுறுபவனாக நன்கறிபவனாக, இருக்கிறான்.