إِن تُبْدُوا۟ خَيْرًا أَوْ تُخْفُوهُ أَوْ تَعْفُوا۟ عَن سُوٓءٍ فَإِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا قَدِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அல்லது ஒரு கெடுதியை நீங்கள் மன்னித்தாலும் (அது நன்றே). நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் பிழைபொறுப்பவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifநன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அல்லது ஒரு கெட்டதை நீங்கள் மன்னித்தாலும் (அது நன்றே). நிச்சயமாக அல்லாஹ் (தனது அடியார்களின் குற்றங்களை அவர்கள் திருந்தினால்) முற்றிலும் மன்னிப்பவனாக, (அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்களை தண்டிக்க) பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi149. (ஒருவருக்குச் செய்யும்) நன்மையை நீங்கள் வெளியாக்கினாலும் அல்லது அதை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீங்கை நீங்கள் மன்னித்துவிட்டாலும் (அது உங்களுக்கே மிக நன்று. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (குற்றங்களை) மிக மன்னிப்பவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்.