caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 141

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:141

ٱلَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمْ فَإِن كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ ٱللَّهِ قَالُوٓا۟ أَلَمْ نَكُن مَّعَكُمْ وَإِن كَانَ لِلْكَٰفِرِينَ نَصِيبٌ قَالُوٓا۟ أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ وَنَمْنَعْكُم مِّنَ ٱلْمُؤْمِنِينَ فَٱللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَلَن يَجْعَلَ ٱللَّهُ لِلْكَٰفِرِينَ عَلَى ٱلْمُؤْمِنِينَ سَبِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் உங்களுக்கு (சோதனையை) எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு வெற்றி (கிடைத்து) இருந்தால், நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர். நிராகரிப்பாளர்களுக்கு (வெற்றியில்) ஓர் அளவு (கிடைத்து) இருந்தால் “நாங்கள் உங்களை (வெல்ல ஆற்றல் பெற்றிருந்தும்) வெற்றி கொள்ளவில்லையே! உங்களை நம்பிக்கையாளர்களிடமிருந்து பாதுகாக்கவில்லையா?” என்று கூறுகின்றனர். உங்களுக்கிடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். நம்பிக்கையாளர்கள் மீது (வெற்றி கொள்ள) நிராகரிப்பாளர்களுக்கு ஒரு வழியையும் அல்லாஹ் அறவே ஆக்கமாட்டான்.
Tamil Translation - Omar Sharif(நயவஞ்சகமுடைய) இவர்கள் (நம்பிக்கையாளர்களாகிய) உங்களுக்கு (சோதனையை) எதிர்பார்க்கிறார்கள். ஆக, அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு வெற்றி (கிடைத்து) இருந்தால், “நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறு(வதுடன் போரில் உங்களுக்கு கிடைத்த செல்வத்தில் அவர்களுக்கும் பங்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்)கிறார்கள். நிராகரிப்பாளர்களுக்கு ஓர் அளவு (வெற்றி கிடைத்து) இருந்தால் “நாங்கள் (உங்களை வெல்ல ஆற்றல் பெற்றிருந்தும்) உங்களை வெற்றி கொள்ளவில்லையே! இன்னும், உங்களை நம்பிக்கையாளர்களிடமிருந்து பாதுகாக்கவில்லையா?” என்று கூறு(வதுடன் அவர்களின் ஆதரவை எதிர்பார்க்)கிறார்கள். (இப்படியாக இரு முகத்தை காட்டுகிறார்கள். யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ அவர்கள் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள்.) ஆக, உங்களுக்கிடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். நம்பிக்கையாளர்கள் மீது (வெற்றி கொள்ள) நிராகரிப்பாளர்களுக்கு ஒரு வழியையும் அல்லாஹ் அறவே ஆக்கமாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi141. (நயவஞ்சகர்களாகிய) இவர்கள் உங்களைக் கவனித்த வண்ணம் இருக்கின்றனர். அல்லாஹ்வி(ன் உதவியி)னால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால் (உங்களிடம் வந்து) நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர். நிராகரிப்பவர்களுக்கு ஏதும் வெற்றி கிடைத்துவிட்டால் (அவர்களிடம் சென்று) ‘‘நாங்கள் (நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவி புரிந்து) உங்களை வெற்றி கொள்ளக் கூடுமாயிருந்தும் நம்பிக்கைகொண்ட அவர்களிடமிருந்து நாம் உங்களைப் பாதுகாக்கவில்லையா?'' என்று கூறுகின்றனர். உங்களுக்கும் அ(ந்நய)வ(ஞ்சக)ர்களுக்கும் இடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை வெற்றிகொள்ள அல்லாஹ் ஒரு வழியையும் வைக்கமாட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70