caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 142

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:142

إِنَّ ٱلْمُنَٰفِقِينَ يُخَٰدِعُونَ ٱللَّهَ وَهُوَ خَٰدِعُهُمْ وَإِذَا قَامُوٓا۟ إِلَى ٱلصَّلَوٰةِ قَامُوا۟ كُسَالَىٰ يُرَآءُونَ ٱلنَّاسَ وَلَا يَذْكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்கின்றனர். அவன் அவர்களை வஞ்சிப்பவன் ஆவான். அவர்கள் தொழுகைக்கு நின்றால் சோம்பேறிகளாக நிற்கின்றனர். மனிதர்களுக்குக் காண்பிக்கின்றனர். குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைவு கூரமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள் (என்று நினைக்கிறார்கள்). அவனோ அவர்களை ஏமாற்றக் கூடியவன் ஆவான். இன்னும், அவர்கள் தொழுகைக்கு நின்றால் சோம்பேறிகளாக மனிதர்களுக்குக் காண்பித்தவர்களாக (முகஸ்துதியை விரும்பியவர்களாக) நிற்கிறார்கள்; இன்னும், குறைவாகவே தவிர அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூரமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi142. நிச்சயமாக (நிராகரிக்கும்) இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக் கருது)கின்றனர். எனினும், அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகிறான். அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கிறார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே தவிர அல்லாஹ்வை தியானிப்பதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70