وَلَن تَسْتَطِيعُوٓا۟ أَن تَعْدِلُوا۟ بَيْنَ ٱلنِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ فَلَا تَمِيلُوا۟ كُلَّ ٱلْمَيْلِ فَتَذَرُوهَا كَٱلْمُعَلَّقَةِ وَإِن تُصْلِحُوا۟ وَتَتَّقُوا۟ فَإِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் ஆசைப்பட்டாலும் மனைவிகளுக்கிடையில் நீதமாக நடப்பதற்கு அறவே இயலமாட்டீர்கள். (ஒருத்தியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து விடாதீர்கள் (சாய்ந்து விட்டால் மற்ற) அவளை தொங்கவிடப்பட்டவளைப் போன்று விட்டு விடுவீர்கள்! நீங்கள் சமாதானம் செய்து, அல்லாஹ்வை அஞ்சினால் நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifநீங்கள் ஆசைப்பட்டாலும் மனைவிகளுக்கிடையில் நீதமாக நடப்பதற்கு அறவே இயலமாட்டீர்கள். ஆகவே, (ஒருத்தியின் பக்கம் மட்டும்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து விடாதீர்கள். அ(ப்படி சாய்ந்து மற்ற)வளை (அந்தரத்தில்) தொங்கவிடப்பட்டவளைப் போன்று விட்டுவிடாதீர்கள்! இன்னும், நீங்கள் சமாதானம் செய்து (உங்கள் ஒழுக்கங்களையும் குணங்களையும் சீர்திருத்திக் கொண்டால்); இன்னும், (மனைவிகள் விஷயத்தில்) அல்லாஹ்வை அஞ்சினால் (உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதுடன் உங்கள் மீது கருணை புரிந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்படுத்துவான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi129. (நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள் (உங்கள்) மனைவிகளுக்கிடையில் அன்புகாட்டுவதில் நீதமாக நடக்க வேண்டுமென்று விரும்பியபோதிலும் (அது) உங்களால் சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கியவளாக விட்டுவிடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கருணை புரிபவனாக இருக்கிறான்.