لَّيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَآ أَمَانِىِّ أَهْلِ ٱلْكِتَٰبِ مَن يَعْمَلْ سُوٓءًا يُجْزَ بِهِۦ وَلَا يَجِدْ لَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே! வெற்றி) உங்கள் விருப்பங்களைக் கொண்டும் இல்லை, வேதக்காரர்களின் விருப்பங்களைக் கொண்டுமில்லை. எவன் ஒரு தீமையைச் செய்வானோ அவன் அதற்கு கூலி கொடுக்கப்படுவான். அல்லாஹ்வையன்றி தனக்கு ஒரு பாதுகாவலரையோ ஓர் உதவியாளரையோ பெறமாட்டான்.
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே! வெற்றி என்பது) உங்கள் விருப்பங்களுக்கு ஏற்பவும் இல்லை, வேதக்காரர்களின் விருப்பங்களுக்கு ஏற்பவும் இல்லை. எவன் ஒரு தீமையைச் செய்வானோ அவனுக்கு அதற்கு கூலி கொடுக்கப்படும். இன்னும், அல்லாஹ்வையன்றி தனக்கு ஒரு பாதுகாவலரையோ ஓர் உதவியாளரையோ அவன் காண மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi123. (நம்பிக்கையாளர்களே! மறுமையில்) உங்கள் விருப்பப்படியோ, வேதத்தையுடை யவர்களின் விருப்பப்படியோ (காரியம் நடப்பது) இல்லை. ஆயினும், எவன் பாவம் செய்கிறானோ அவன் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீருவான். அவன் அல்லாஹ்வையன்றி தனக்கு உதவி செய்பவரையோ அல்லது துணை புரிபவரையோ (அங்கு) காணமாட்டான்.