caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 122

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:122

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ سَنُدْخِلُهُمْ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا وَعْدَ ٱللَّهِ حَقًّا وَمَنْ أَصْدَقُ مِنَ ٱللَّهِ قِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள், அவர்களை (மறுமையில்) சொர்க்கங்களில் நுழைப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றென்றும் நிரந்தரமானவர்கள். அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளிக்கிறான். சொல்லில் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?
Tamil Translation - Omar Sharifஎனினும், எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ, அவர்களை (மறுமையில்) சொர்க்கங்களில் நாம் பிரவேசிக்க செய்வோம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றென்றும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளிக்கிறான். சொல்லில் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?
Tamil Translation - Abdulhamid Baqawi122. எவர்கள் (ஷைத்தானை நிராகரித்து விட்டு அல்லாஹ்வை) நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை (மறுமையில்) நாம் சொர்க்கங்களில் புகுத்துவோம். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே! அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70