وَمَن يَعْمَلْ مِنَ ٱلصَّٰلِحَٰتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُو۟لَٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் நம்பிக்கை கொண்டு நன்மைகளில் இருந்து (முடிந்தளவு) செய்வார்களோ, அவர்கள்தான் சொர்க்கத்தில் நுழைவார்கள். ஒரு (பேரீத்தக் கொட்டையின்) கீறல் அளவும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளில் இருந்து (முடிந்தளவு) செய்வார்களோ, அவர்கள் ஆண்களோ அல்லது பெண்களோ அவர்கள்தான் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். இன்னும், ஒரு (பேரீத்தங் கொட்டையின்) கீறல் அளவும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi124. ஆகவே, ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள்தான் சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் அற்ப அளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.