وَإِذَا مَسَّ ٱلْإِنسَٰنَ ضُرٌّ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعْمَةً مِّنْهُ نَسِىَ مَا كَانَ يَدْعُوٓا۟ إِلَيْهِ مِن قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادًا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا إِنَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلنَّارِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் தன் இறைவனை அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவனாக பிரார்த்திக்கின்றான். பிறகு, அவன் (-அல்லாஹ்) தன் புறத்தில் இருந்து அவனுக்கு ஓர் அருளை வழங்கினால் இதற்கு முன்னர் தான் அவனிடம் (-இறைவனிடம்) பிரார்த்தித்து வந்ததை அவன் விட்டு விடுகிறான். இன்னும், அல்லாஹ்விற்கு இணை(யாக கற்பனை தெய்வங்)களை ஏற்படுத்துகிறான், அவனுடைய பாதையை விட்டு (மக்களை) வழிகெடுப்பதற்காக. (நபியே!) “கூறுவீராக! நீ உனது நிராகரிப்பைக் கொண்டு கொஞ்சகாலம் சுகமடைந்துகொள்! நிச்சயமாக நீ நரகவாசிகளில் ஒருவன்தான்.”
Tamil Translation - Omar Sharifமனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் தன் இறைவனை அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவனாக அழைத்து பிரார்த்திக்கிறான். பிறகு, (இறைவன்) தன் புறத்திலிருந்து அவனுக்கு ஓர் அருளை வழங்கினால் இதற்கு முன்னர் அவனிடம் பிரார்த்திப்பவனாக இருந்ததை அவன் மறந்து விடுகிறான். இன்னும், அல்லாஹ்விற்கு இணை(யாக கற்பனை தெய்வங்)களை ஏற்படுத்துகிறான், அவனுடைய பாதையை விட்டு (மக்களை) வழிகெடுப்பதற்காக (இவ்வாறு செய்கிறான்). (நபியே!) கூறுவீராக! “நீ உனது நிராகரிப்பைக் கொண்டு சிறிது (காலம்) சுகமடைந்துகொள்! நிச்சயமாக நீ நரகவாசிகளில் ஒருவன்தான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi8. மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படும் சமயத்தில், முற்றிலும் தன் இறைவனையே நோக்கிப் பிரார்த்தனை செய்த வண்ணமாயிருக்கிறான். இறைவன் தன்னிடமிருந்து ஓர் அருளை அவனுக்குப் புரியும் சமயத்தில், இதற்கு முன்னர், தான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அவனையே மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு (பொய்யான தெய்வங்களை) இணைகளாக்கி மற்றவர்களையும் அவனுடைய பாதையிலிருந்து வழி கெடுக்கிறான். (நபியே! அவனை நோக்கி,) நீர் கூறுவீராக: ‘‘நீ (இவ்வாறு இறைவனை) நிராகரித்த வண்ணமே சிறிது காலம் சுகமனுபவி. (முடிவில்) நிச்சயமாக நீ நரகவாசிதான்.''