وَأَشْرَقَتِ ٱلْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ ٱلْكِتَٰبُ وَجِا۟ىٓءَ بِٱلنَّبِيِّـۧنَ وَٱلشُّهَدَآءِ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(மறுமை நாளில் இறைவன் வரும்போது) பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். புத்தகம் (முன்னால்) வைக்கப்படும். நபிமார்கள், ஷஹீதுகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(மறுமை நாளில் இறைவன் வரும்போது) பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (செயல்கள் பதியப்பட்ட) புத்தகம் (முன்னால்) வைக்கப்படும். நபிமார்கள், ஷஹீதுகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi69. இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப்பட்டுவிடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங்களையும் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.