caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 68

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:68

وَنُفِخَ فِى ٱلصُّورِ فَصَعِقَ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَىٰ فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசூரில் ஊதப்படும். வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் இறந்து விடுவார்கள் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அதில் மற்றொரு முறை ஊதப்படும். அப்போது அவர்கள் எழுந்து நின்று பார்ப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஎக்காளத்தில் ஊதப்படும். ஆக, வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் இறந்து விடுவார்கள், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அதில் மற்றொரு முறை ஊதப்படும். அப்போது அவர்கள் (உயிர்பெற்று எழுந்து தங்களுக்கு நிகழப்போவதை) பார்த்தவர்களாக நின்றுகொண்டிருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi68. ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து) விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (இறைவனை) எதிர் நோக்கி நிற்பார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70