caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 23

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:23

ٱللَّهُ نَزَّلَ أَحْسَنَ ٱلْحَدِيثِ كِتَٰبًا مُّتَشَٰبِهًا مَّثَانِىَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهْدِى بِهِۦ مَن يَشَآءُ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் மிக அழகிய பேச்சை -பலமுறை ஓதப்படுகின்ற, ஒன்றுக்கொன்று ஒப்பான- ஒரு வேதமாக இறக்கினான். தங்கள் இறைவனை பயப்படுபவர்களின் தோல்கள் அதை ஓதுவதன் மூலம் சிலிர்க்கின்றன. பிறகு, அவர்களின் தோல்களும் அவர்களின் உள்ளங்களும் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் மென்மையாகின்றன. இதுதான் அல்லாஹ்வின் நேர்வழியாகும். தான் நாடியவர்களை அவன் இதன்மூலம் நேர்வழி செலுத்துகின்றான். அல்லாஹ் எவரை வழிகெடுக்கின்றானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் (அவரை நல்வழிபடுத்துபவர்) யாரும் இல்லை.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் மிக அழகிய பேச்சை - பலமுறை ஓதப்படுகின்ற, ஒன்றுக்கொன்று ஒப்பான - ஒரு வேதமாக இறக்கினான். தங்கள் இறைவனை பயப்படுபவர்களின் தோல்கள் அ(தை அவர்கள் ஓதுவ)தன் மூலம் சிலிர்க்கின்றன. பிறகு, அவர்களின் தோல்களும் அவர்களின் உள்ளங்களும் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் திரும்பி மென்மையாகி (அமைதி பெறுகி)ன்றன. இதுதான் அல்லாஹ்வின் நேர்வழியாகும். தான் நாடியவர்களை அவன் இதன்மூலம் நேர்வழி செலுத்துகிறான். அல்லாஹ் எவரை வழிகெடுக்கிறானோ அவரை நேர்வழிபடுத்துபவர் யாரும் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi23. அல்லாஹ் மிக அழகான விஷயங்களையே (இந்த வேதத்தில்) இறக்கி இருக்கிறான். (இதிலுள்ள வசனங்களுக்கிடையில் முரண்பாடில்லாமல்)ஒன்றை மற்றொன்று ஒத்ததாகவும் (மனதில் பதிவதற்காக ஒரே விஷயத்தை) திரும்பத் திரும்பவும் கூறப்பட்டுள்ளது. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ, (அவர்கள் அதைக் கேட்ட உடன்) அவர்களுடைய தோல்கள் சிலிர்த்து விடுகின்றன. பின்னர், அவர்களுடைய தோல்களும் உள்ளங்களும் அல்லாஹ்வுடைய வேதத்தின் பக்கம் இளகி அதன்படி செயல்படுகின்றன. இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தான் விரும்பியவர்களை இதன் மூலம் அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விட்டானோ அவனை நேர்வழி செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70