caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 22

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:22

أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدْرَهُۥ لِلْإِسْلَٰمِ فَهُوَ عَلَىٰ نُورٍ مِّن رَّبِّهِۦ فَوَيْلٌ لِّلْقَٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكْرِ ٱللَّهِ أُو۟لَٰٓئِكَ فِى ضَلَٰلٍ مُّبِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் எவருடைய நெஞ்சை இஸ்லாமிற்கு விரிவாக்கி, அவர் தன் இறைவனின் வெளிச்சத்தில் இருக்கின்றாரோ அவர் உள்ளம் இறுகியவருக்கு சமமாவாரோ? அல்லாஹ்வின் நினைவை விட்டு உள்ளங்கள் இறுகியவர்களுக்கு நாசம் உண்டாகட்டும். அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் எவருடைய நெஞ்சை இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுவதற்கு விரிவாக்கிவிடுவானோ, அவர் தன் இறைவனின் (நேர்வழி என்ற) வெளிச்சத்தில் இருப்பார். அத்தகையவர் உள்ளம் இறுகியவருக்கு சமமாவாரோ? அல்லாஹ்வின் நினைவை விட்டு உள்ளங்கள் இறுகியவர்களுக்கு நாசம் உண்டாகட்டும். அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. எவருடைய உள்ளத்தை இஸ்லாமை ஏற்க அல்லாஹ் விசாலப்படுத்தினானோ அவர், தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கிறார். அல்லாஹ்வை ஞாபகம் செய்வதிலிருந்து விலகி, எவர்களுடைய உள்ளங்கள் (இறுகி) கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70