أَفَمَن يَتَّقِى بِوَجْهِهِۦ سُوٓءَ ٱلْعَذَابِ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَقِيلَ لِلظَّٰلِمِينَ ذُوقُوا۟ مَا كُنتُمْ تَكْسِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதனது முகத்தால் மறுமை நாளில் கெட்ட வேதனையை தவிர்த்துக் கொள்பவன் (கைகள் விலங்கிடப்பட்டு நரகத்தில் தலைகீழாக எறியப்படுகின்றவனைப் போன்று ஆவாரா?) அநியாயக்காரர்களுக்கு கூறப்படும்: “நீங்கள் செய்து வந்ததை (அதற்குரிய தண்டனையை இப்போது) சுவையுங்கள்!”
Tamil Translation - Omar Sharifதனது முகத்தால் மறுமை நாளில் நிகழப்போகும் கெட்ட தண்டனையை தவிர்த்துக் கொள்பவன் கைகள் விலங்கிடப்பட்டு நரகத்தில் தலைகீழாக எறியப்படுபவனைப் போன்று ஆவாரா? இன்னும், (அந்த நாளில்) அநியாயக்காரர்களுக்கு கூறப்படும்: “நீங்கள் செய்துகொண்டிருந்ததை (-அதற்குரிய தண்டனையை இப்போது) சுவையுங்கள்!”
Tamil Translation - Abdulhamid Baqawi24. எவன், மறுமையின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக் கொண்டேனும் தடுத்துக் கொள்ளப் பிரயாசைப்படுபவனா (சொர்க்கவாசிக்கு சமமாவான்)? அநியாயக்காரர்களை நோக்கி நீங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலைச் சுவைத்துப் பாருங்கள் என்றுதான் கூறப்படும்.