caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Faatir அத்தியாயம், வசனம் 43

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 43 · 35:43

ٱسْتِكْبَارًا فِى ٱلْأَرْضِ وَمَكْرَ ٱلسَّيِّئِ وَلَا يَحِيقُ ٱلْمَكْرُ ٱلسَّيِّئُ إِلَّا بِأَهْلِهِۦ فَهَلْ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلْأَوَّلِينَ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبْدِيلًا وَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَحْوِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமியில் பெருமையடிப்பதையும் தீய சூழ்ச்சி செய்வதையும் தவிர அதிகப்படுத்தவில்லை. தீய சூழ்ச்சி அதை செய்தவர்களைத் தவிர சூழ்ந்துகொள்ளாது. முன் சென்றோரின் வழிமுறையைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? அல்லாஹ்வின் வழிமுறையில் அறவே மாற்றத்தை நீர் காணமாட்டீர். இன்னும் அல்லாஹ்வின் வழிமுறையில் நீர் எவ்வித திருப்பத்தையும் காணமாட்டீர்.
Tamil Translation - Omar Sharifபூமியில் பெருமையடிப்பதையும் தீய சூழ்ச்சி செய்வதையும் தவிர அதிகப்படுத்தவில்லை. தீய சூழ்ச்சி அதை செய்தவர்களைத் தவிர சூழ்ந்துகொள்ளாது. முன் சென்றோரின் வழிமுறையைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கிறார்களா? ஆக, அல்லாஹ்வின் வழிமுறையில் அறவே மாற்றத்தை நீர் காணமாட்டீர். இன்னும் அல்லாஹ்வின் வழிமுறையில் நீர் எவ்வித திருப்பத்தையும் காணமாட்டீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi43. (மேலும்,) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்துகொள்ளாது. (அழிந்துபோன) முன் சென்றவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியிலும் செல்ல) இவர்கள் எதிர் பார்க்கின்றனரா? அல்லாஹ் ஏற்படுத்திய வழிக்கு மாற்றத்தை நிச்சயமாக நீர் காண மாட்டீர். (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் கோணலையும் நிச்சயமாக நீர் காணமாட்டீர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70