وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ لَئِن جَآءَهُمْ نَذِيرٌ لَّيَكُونُنَّ أَهْدَىٰ مِنْ إِحْدَى ٱلْأُمَمِ فَلَمَّا جَآءَهُمْ نَذِيرٌ مَّا زَادَهُمْ إِلَّا نُفُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மிக உறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தனர்: “அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தால், சமுதாயங்களில் (நேர்வழிபெற்ற) ஒரு சமுதாயத்தை விட மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக நிச்சயமாக அவர்கள் இருந்திருப்பார்கள்” என்று. அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்த போது அது அவர்களுக்கு (சத்தியத்தை விட்டு) விலகிச் செல்வதைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் மிக உறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தனர்: “அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தால், சமுதாயங்களில் (நேர்வழிபெற்ற) ஒரு சமுதாயத்தை விட மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக நிச்சயமாக அவர்கள் இருந்திருப்பார்கள்” என்று. ஆக, அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தபோது அது அவர்களுக்கு (சத்தியத்தை விட்டு) விலகிச் செல்வதைத் தவிர அதிகப்படுத்தவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi42. ‘‘எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்று விடுவோம்'' என்று (இந்த அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியான சத்தியம் செய்து கூறினார்கள். எனினும், இவர்களிடம் (நம்) தூதர் வந்த சமயத்தில் அது வெறுப்பைத் தவிர (வேறெதனையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.