أَوَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَكَانُوٓا۟ أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَمَا كَانَ ٱللَّهُ لِيُعْجِزَهُۥ مِن شَىْءٍ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ إِنَّهُۥ كَانَ عَلِيمًا قَدِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் பூமியில் பயணித்து, அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று பார்க்கவில்லையா! அவர்கள் இவர்களை விட பலத்தால் கடுமையானவர்களாக இருந்தனர். அல்லாஹ் -வானங்களில், பூமியில் உள்ள எதுவும் அவனை பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. நிச்சயமாக அவன் நன்கறிந்தவனாக, பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் பூமியில் பயணிக்க மாட்டார்களா? அப்படிப் பயணித்தால் அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று அவர்கள் பார்ப்பார்களே! அ(க்காலத்தில் இருந்த)வர்கள் இ(க்காலத்தில் இருப்ப)வர்களை விட வலிமையால் பலமிக்கவர்களாக இருந்தனர். வானங்களில், பூமியில் உள்ள எதுவும் அல்லாஹ்வை பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. நிச்சயமாக அவன் நன்கறிந்தவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi44. பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? (அவ்வாறாயின்) இவர்களைவிட பலசாலிகளான இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (அவர்கள் எவ்வளவோ பலசாலிகளாக இருந்தும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால்,) வானத்திலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனாக, பெரும் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.