قُلِ ٱدْعُوا۟ ٱلَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ ٱللَّهِ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِن شِرْكٍ وَمَا لَهُۥ مِنْهُم مِّن ظَهِيرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்தவர்களை அழையுங்கள்! அவர்கள் வானங்களிலும் பூமியிலும் அணு அளவுக்கும் உரிமை பெறமாட்டார்கள். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எவ்வித பங்கும் இல்லை. அவர்களில் எவரும் அவனுக்கு உதவியாளர் இல்லை.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி (தெய்வங்கள் என்று) நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்தவர்களை அழையுங்கள்! அவர்கள் வானங்களிலும் பூமியிலும் அணு அளவுக்கும் உரிமை பெறமாட்டார்கள். இன்னும், அவ்விரண்டிலும் அவர்களுக்கு எவ்வித பங்கும் இல்லை. அவர்களில் எவரும் அவனுக்கு உதவியாளராக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi22. (நபியே!) கூறுவீராக: அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர்களோ அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. மேலும், அவற்றை படைப்பதில் அவர்களுக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை. (அவற்றை படைப்பதில்) அவை அவனுக்கு உதவி செய்யவுமில்லை.