caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saba அத்தியாயம், வசனம் 23

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 58 · 34:23

وَلَا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ عِندَهُۥٓ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُۥ حَتَّىٰٓ إِذَا فُزِّعَ عَن قُلُوبِهِمْ قَالُوا۟ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا۟ ٱلْحَقَّ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் எவருக்கு அனுமதி அளித்தானோ அவருக்கே தவிர (பிறருக்கு) அவனிடம் (யாருடைய) சிபாரிசு(ம்) பலன்தராது. இறுதியாக, அவர்களது உள்ளங்களை விட்டு திடுக்கம் (பயம்) சென்றுவிட்டால் உங்கள் இறைவன் என்ன கூறினான் என்று கேட்பார்கள். உண்மையைத்தான் (கூறினான்) என்று (வானவர்கள்) கூறுவார்கள். அவன்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன்.
Tamil Translation - Omar Sharifஅவன் எவருக்கு அனுமதி அளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் சிபாரிசுகள் பலன்தராது. இறுதியாக, அவர்களது உள்ளங்களை விட்டு திடுக்கம் (பயம்) சென்றுவிட்டால் உங்கள் இறைவன் என்ன கூறினான் என்று (சில வானவர்கள்) கேட்பார்கள். உண்மையைத்தான் (கூறினான்) என்று (மற்ற வானவர்கள் பதில்) கூறுவார்கள். அவன்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. அவனுடைய அனுமதி பெற்ற (வான)வர்களைத் தவிர மற்றவர்கள் அவனிடத்தில் பரிந்து பேசுவதும் பயனளிக்காது. (அல்லாஹ்வுடைய ஒரு கட்டளை பிறக்கும் சமயத்தில் அவர்கள் பயந்து நடுங்குகின்றனர்.) அவர்களுடைய உள்ளத்தில் இருந்து நடுக்கம் நீங்கியதும் (அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி) ‘‘ உங்கள் இறைவன் என்ன கட்டளையிட்டான்?'' என்று கேட்பார்கள். அதற்கு மற்றவர்கள் ‘‘ (இடவேண்டிய) நியாயமான கட்டளையையே இட்டான்; அவனோ மிக்க மேலானவன், மிகப் பெரியவன் ஆவான்'' என்று கூறுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70