وَمَا كَانَ لَهُۥ عَلَيْهِم مِّن سُلْطَٰنٍ إِلَّا لِنَعْلَمَ مَن يُؤْمِنُ بِٱلْـَٔاخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِى شَكٍّ وَرَبُّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ حَفِيظٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு அவர்கள் மீது அறவே அதிகாரம் இருக்கவில்லை. இருந்தாலும் மறுமையை நம்புகின்றவரை அதில் சந்தேகத்தில் இருப்பவர்களில் இருந்து (பிரித்து) நாம் அறிவதற்காக (இவ்வாறு சோதித்தோம்). உமது இறைவன் எல்லாவற்றையும் கண்காணிக்கின்றவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஅவனுக்கு அவர்கள் மீது அறவே அதிகாரம் இருக்கவில்லை. இருந்தாலும் மறுமையை நம்பிக்கை கொள்பவர்களை அதில் சந்தேகத்தில் இருப்பவர்களிலிருந்து (பிரித்து வெளிப்படையாக) நாம் அறிவதற்காக (இவ்வாறு சோதித்தோம்). உமது இறைவன் எல்லாவற்றையும் கண்காணிப்பவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. எனினும், அவர்களை நிர்ப்பந்திக்க அவனுக்கு ஒரு அதிகாரமும் இல்லை. ஆயினும், மறுமையை நம்பாத அவர்களில் (மறுமையை) நம்புபவர் எவர் என்பதை நாம் தெளிவாக அறி(வித்து விடு)வதற்காகவே இவ்வாறு நடைபெற்றது. உம் இறைவனே எல்லா பொருள்களையும் பாதுகாப்பவன் ஆவான்.