caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saba அத்தியாயம், வசனம் 19

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 58 · 34:19

فَقَالُوا۟ رَبَّنَا بَٰعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَجَعَلْنَٰهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَٰهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆனால், அவர்கள் எங்கள் இறைவா! எங்கள் பயணங்களுக்கு மத்தியில் தூரத்தை ஏற்படுத்து! என்று கூறினர். அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதி இழைத்தனர். அவர்களை சுக்கு நூறாக கிழித்துவிட்டோம். (முற்றிலுமாக பிரித்துவிட்டோம்.) அவர்களை பேசப்படக்கூடிய கதைகளாக்கி விட்டோம். நிச்சயமாக இதில் பெரும் பொறுமையாளர்கள், அதிகம் நன்றி செலுத்துகின்றவர்கள் எல்லோருக்கும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவா! (எங்கள் பாதையில் உள்ள ஊர்களை இல்லாமல் ஆக்கி) எங்கள் பயணங்களுக்கு மத்தியில் தூரத்தை ஏற்படுத்து! (அப்போது அதிக பயண சாமான்களோடு செல்லும் எங்களுக்கு ஏனைய மக்களுக்கு மத்தியில் பெருமையாக இருக்கும்.)” அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதி இழைத்தனர். ஆக, அவர்களை (மக்களுக்கு மத்தியில் பேசப்படுகின்ற) செய்திகளாக்கி விட்டோம். அவர்களை சுக்குநூறாக கிழித்துவிட்டோம். (முற்றிலுமாக பிரித்துவிட்டோம்.) நிச்சயமாக இதில் பொறுமையாளர்களுக்கு, அதிகம் நன்றி செலுத்துபவர்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi19. ஆனால், அவர்கள் (இந்த நன்றியைப் புறக்கணித்து ‘‘தொடர்ச்சியாக ஊர்கள் இருப்பது எங்கள் பயணத்திற்கு இன்பம் அளிக்கவில்லை.) எங்கள் இறைவனே! எங்கள் பயணங்கள் நெடுந்தூரமாகும்படிச் செய்(வதற்காக மத்தியில் தொடர்ச்சியாக உள்ள இக்கிராமங்களை அழித்து விடு)வாயாக!'' என்று பிரார்த்தித்துத் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ஆகவே, (அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து) அவர்களையும் பல இடங்களுக்குச் சிதறடித்துப் பலரும் (இழிவாகப்) பேசப்படக்கூடிய கதைகளாக்கிவிட்டோம். பொறுமையுடையவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70