وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ ٱلْقُرَى ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا قُرًى ظَٰهِرَةً وَقَدَّرْنَا فِيهَا ٱلسَّيْرَ سِيرُوا۟ فِيهَا لَيَالِىَ وَأَيَّامًا ءَامِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு இடையிலும் நாம் அருள்வளம் புரிந்த ஊர்களுக்கு இடையிலும் (ஒவ்வொரு ஊராருக்கும்) தெளிவாகத் தெரியும்படியான பல ஊர்களை நாம் ஏற்படுத்தினோம். அவற்றில் பயணத்தை நிர்ணயித்தோம் (ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சிரமமின்றி பயணிப்பதை எளிதாக்கினோம்). அவற்றில் பல இரவுகளும் பல பகல்களும் பாதுகாப்பு பெற்றவர்களாக பயணியுங்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு இடையிலும் நாம் அருள்வளம் புரிந்த (ஷாம் தேச) ஊர்களுக்கு இடையிலும் (ஒவ்வொரு ஊராருக்கும்) தெளிவாகத் தெரியும்படியான பல ஊர்களை நாம் ஏற்படுத்தினோம். அவற்றில் பயணத்தை நிர்ணயித்தோம் (ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சிரமமின்றி பயணிப்பதை எளிதாக்கினோம்). அவற்றில் பல இரவுகளும் பல பகல்களும் பாதுகாப்புப் பெற்றவர்களாக பயணியுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi18. அவர்களு(டைய ஊரு)க்கும் நாம் அருள்புரிந்த (சிரியாவிலுள்ள செழிப்பான) ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களையும் உண்டுபண்ணி அவற்றில் பாதைகளையும் அமைத்து, ‘‘ இரவு பகல் எந்த நேரத்திலும் அச்சமற்றவர்களாக அதில் பிரயாணம் செய்யுங்கள்'' (என்று கூறியிருந்தோம்).