يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمْ وَٱخْشَوْا۟ يَوْمًا لَّا يَجْزِى وَالِدٌ عَن وَلَدِهِۦ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَن وَالِدِهِۦ شَيْـًٔا إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களே! உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்! இன்னும், ஒரு நாளை பயந்துகொள்ளுங்கள்! (அந்நாளில்) தந்தை தன் மகனை விட்டும் (வேதனையை) தடுக்கமாட்டார். பிள்ளையும் தனது தகப்பனை விட்டும் (வேதனையை) தடுக்கக் கூடியவராக இல்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. ஆகவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். ஏமாற்றக்கூடியவன் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்.
Tamil Translation - Omar Sharifமக்களே! உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்! இன்னும், ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள்! (அந்நாளில்) தந்தை, தன் மகனை விட்டும் (தண்டனையை) தடுக்க மாட்டார். பிள்ளையும் தனது தகப்பனை விட்டும் (தண்டனையை) தடுக்கக் கூடியவராக இல்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. ஆகவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். இன்னும், ஏமாற்றக் கூடியவன் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்.
Tamil Translation - Abdulhamid Baqawi33. மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி ஒரு நாளைப்பற்றியும் பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவமாட்டார்; பிள்ளையும் தந்தைக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டான். (ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்ற நாளாகும் அது.) நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்.