وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَٱلظُّلَلِ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمْ إِلَى ٱلْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(பெரும்) நிழல்களைப் போன்ற ஓர் அலை அவர்களை சூழ்ந்துகொண்டால் அல்லாஹ்வை (மட்டும் உதவிக்கு) அழைக்கின்றனர் -மார்க்கத்தை (வழிபாடுகளை) அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக. கரைக்கு அவர்களை அவன் காப்பாற்றியபோது அவர்களில் சிலர் (சொல்லால் மட்டும்) நல்லவர்களாக இருக்கின்றார்கள். (உள்ளத்தில் நிராகரிப்பை மறைத்துக் கொள்கின்றனர். மற்றும் அதிகமானவர்களோ வெளிப்படையாக நிராகரிப்புக்கே திரும்பி விடுகின்றனர்.) வாக்குறுதிகளை அதிகம் மீறக்கூடியவர்கள், நன்றி கெட்டவர்கள் ஆகிய எல்லோரையும் தவிர நமது அத்தாட்சிகளை (-வசனங்களை மற்றவர்கள்) மறுக்க மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(பெரும்) நிழல்களைப் போன்ற ஓர் அலை அவர்களை சூழ்ந்துகொண்டால் அல்லாஹ்வை (மட்டும் உதவிக்கு) அழைக்கிறார்கள், - வழிபாடுகளை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக இருக்கும் நிலையில். ஆக, அவர்களை அவன் கரைக்கு காப்பாற்றியபோது அவர்களில் சிலர் (சொல்லால் மட்டும்) நல்லவர்களாக இருக்கிறார்கள். (உள்ளத்தில் நிராகரிப்பை மறைத்துக் கொள்கிறார்கள். மற்றும் அதிகமானவர்களோ வெளிப்படையாக நிராகரிப்புக்கே திரும்பி விடுகிறார்கள்.) வாக்குறுதிகளை அதிகம் மீறக் கூடியவர்கள், நன்றி கெட்டவர்கள் தவிர நமது அத்தாட்சிகளை மறுக்க மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. (கப்பலில் செல்லும்) அவர்களை(ப் புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள் மேல் முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில், அல்லாஹ்வுக்கு வழிபட்டு, கலப்பற்ற மனதுடன் அவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்! அவன் அவர்களைக் கரையில் இறக்கி பாதுகாத்துக் கொண்டாலோ அவர்களில் சிலர்தான் நிதானமாக நடக்கின்றனர். (பெரும்பாலானவர்களோ நிதானம் தவறியே நடக்கின்றனர்.) மிக நன்றிகெட்ட சதிகாரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் அத்தாட்சிகளை நிராகரிக்க மாட்டார்கள்.