caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Luqman அத்தியாயம், வசனம் 31

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 57 · 31:31

أَلَمْ تَرَ أَنَّ ٱلْفُلْكَ تَجْرِى فِى ٱلْبَحْرِ بِنِعْمَتِ ٱللَّهِ لِيُرِيَكُم مِّنْ ءَايَٰتِهِۦٓ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக கடலில் கப்பல் அல்லாஹ்வின் அருளினால் ஓடுகின்றன - அவன் (-அல்லாஹ்) தனது (வல்லமையின்) அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பதற்காக (இதை செய்தான்) என்பதை நீர் கவனிக்கவில்லையா? நிச்சயமாக இதில் பெரிய பொறுமையாளர், அதிகம் நன்றி செலுத்துபவர் எல்லோருக்கும் (இறை) அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக கப்பல்கள் கடலில் அல்லாஹ்வின் அருளினால் ஓடுகின்றன - அவன் தனது (வல்லமையின்) அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பதற்காக (இதை செய்தான்) என்பதை நீர் கவனிக்கவில்லையா? பெரிய பொறுமையாளர்கள், அதிகம் நன்றி செலுத்துபவர்கள் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi31. அல்லாஹ்வுடைய அருட்கொடைகளைச் சுமந்துகொண்டு கடலில் செல்லும் கப்பலும் அவனுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவிக்கக் கூடியதாக இருப்பதை நீர் கவனிக்கவில்லையா? பொறுமையுடன் (சிரமங்களைச்) சகித்திருந்து, அவனுக்கு நன்றி செலுத்தும் அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70