وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ رُسُلًا إِلَىٰ قَوْمِهِمْ فَجَآءُوهُم بِٱلْبَيِّنَٰتِ فَٱنتَقَمْنَا مِنَ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை அவர்களுடைய மக்களுக்கு நாம் அனுப்பினோம். அவர்களிடம் அவர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தனர். ஆகவே, குற்றமிழைத்தவர்களிடம் நாம் பழிவாங்கினோம். (தூதர்களை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் உதவினோம்.) நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவுவது நம்மீது கடமையாக இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை அவர்களுடைய மக்களுக்கு நாம் அனுப்பினோம். ஆக, அவர்களிடம் அவர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தனர். ஆக, குற்றமிழைத்தவர்களிடம் நாம் பழிவாங்கினோம். இன்னும், (தூதர்களை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் உதவினோம்.) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு உதவுவது நம்மீது கடமையாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi47. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் பல தூதர்களை அவர்களுடைய சமுதாய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர்களும் தெளிவான அத்தாட்சிகளையே அவர்களிடம் கொண்டு வந்தனர். (எனினும், அவற்றை அவர்கள் நிராகரித்து விட்டனர்.) ஆகவே, (அவற்றை நிராகரித்த)குற்றவாளிகளை நாம் பழிவாங்கினோம். (ஏனென்றால் இவ்வாறு பழிவாங்கி) நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாக இருக்கிறது.