ٱللَّهُ ٱلَّذِى يُرْسِلُ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابًا فَيَبْسُطُهُۥ فِى ٱلسَّمَآءِ كَيْفَ يَشَآءُ وَيَجْعَلُهُۥ كِسَفًا فَتَرَى ٱلْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَٰلِهِۦ فَإِذَآ أَصَابَ بِهِۦ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦٓ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகின்றான். அவை மேகங்களை கிளப்புகின்றன. அவன் அவற்றை வானத்தில் தான் நாடியவாறு பரப்புகின்றான். இன்னும், அவற்றை பல துண்டுகளாக அவன் மாற்றுகின்றான். ஆகவே, மழையை -அது அவற்றுக்கு இடையிலிருந்து வெளியேறக்கூடியதாக- நீர் பார்க்கிறீர். அதை தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அவன் அதை அடையச் செய்தால், அப்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான். ஆக, அவை மேகங்களை கிளப்புகின்றன. அவன் அவற்றை வானத்தில் தான் நாடியவாறு பரப்புகிறான். இன்னும், அவற்றை பல துண்டுகளாக அவன் மாற்றுகிறான். ஆக, மழையை - அது அவற்றுக்கு இடையிலிருந்து வெளியேறக்கூடியதாக - பார்க்கிறீர். ஆக, அவன் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதை அருளினால், அப்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi48. அல்லாஹ்தான் காற்றை அனுப்பிவைக்கிறான். அது மேகத்தை ஓட்டுகிறது. அவன் விரும்பியவாறு அதை வானத்தில் திட்டுத் திட்டாகப் பரப்பிவிடுகிறான். அதிலிருந்து மழை பொழிவதை (நபியே!) நீர் காண்கிறீர். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அம்மழை வந்தடையும் சமயத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.