caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Room அத்தியாயம், வசனம் 46

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 84 · 30:46

وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَن يُرْسِلَ ٱلرِّيَاحَ مُبَشِّرَٰتٍ وَلِيُذِيقَكُم مِّن رَّحْمَتِهِۦ وَلِتَجْرِىَ ٱلْفُلْكُ بِأَمْرِهِۦ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், காற்றுகளை (-மழையை) நற்செய்தி தரக்கூடியவையாக அவன் அனுப்புவதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும் தனது அருளை (-மழையை) உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும் கப்பல்கள் அவனுடைய கட்டளையின்படி (கடலில்) செல்வதற்கும் அவனது அருளிலிருந்து நீங்கள் (-வாழ்வாதாரத்தை) தேடுவதற்கும் நீங்கள் நன்றி செலுத்துவதற்கும் (அவன் உங்களுக்கு காற்றுகளை அனுப்புகின்றான்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், காற்றுகளை (-மழையின்) நற்செய்தி தரக்கூடியவையாக அவன் அனுப்புவதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும், தனது அருளை (-மழையை) உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும்; கப்பல்கள் - அவனுடைய கட்டளையின்படி (கடலில்) – செல்வதற்கும்; அவனது அருளிலிருந்து நீங்கள் (-வாழ்வாதாரத்தை) தேடுவதற்கும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்கும் (அவன் உங்களுக்கு காற்றுகளை அனுப்புகிறான்).
Tamil Translation - Abdulhamid Baqawi46. (மழைக்கு முன்னர் குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அவன் அனுப்பி வைப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றே. (அதைக் கொண்டு) அவன் தன் அருளை (மழையை) நீங்கள் சுவைக்கும்படிச் செய்து, கப்பல்களையும் அவன் தன் கட்டளையைக் கொண்டே செல்லும்படிச் செய்கிறான். அதனால் (பல தீவுகளிலும் நாடுகளிலும் உள்ள) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இவற்றுக்காக) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70