وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ إِذَآ أَنتُم بَشَرٌ تَنتَشِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் அவன் உங்களை (உங்கள் மூல பிதாவை) மண்ணிலிருந்து படைத்தது. பிறகு, (அவரின் சந்ததிகளாகிய) நீங்களோ மனிதர்களாக (பூமியில் உணவைத்தேடி பல இடங்களுக்கு) பிரிந்து செல்கிறீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான், அவன் உங்களை (-உங்கள் மூலப் பிதாவை) மண்ணிலிருந்து படைத்தான். பிறகு, (அவரின் சந்ததிகளாகிய) நீங்களோ மனிதர்களாக (பூமியில் உணவைத்தேடி பல இடங்களுக்கு) பிரிந்து செல்கிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. மண்ணிலிருந்து உங்களை படைத்து, பின்னர் நீங்கள் பல பாகங்களிலும் சென்று திரியக்கூடிய மனிதர்களாக ஆனதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும்.