يُخْرِجُ ٱلْحَىَّ مِنَ ٱلْمَيِّتِ وَيُخْرِجُ ٱلْمَيِّتَ مِنَ ٱلْحَىِّ وَيُحْىِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَكَذَٰلِكَ تُخْرَجُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன், இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளியாக்குகின்றான்; உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளியாக்குகின்றான். பூமியை -அது இறந்த பின்னர்- உயிர்ப்பிக்கின்றான். இவ்வாறே நீங்களும் (பூமியிலிருந்து உயிருடன்) வெளியேற்றப்படுவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅவன், இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளியாக்குகிறான்; இன்னும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளியாக்குகிறான்: இன்னும், பூமியை - அது இறந்த பின்னர் - உயிர்ப்பிக்கிறான். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் பூமியிலிருந்து மீண்டும் உயிருடன்) வெளியேற்றப்படுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. அவனே இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான். அவனே உயிருள்ளவற்றிலிருந்து மரணித்தவற்றை வெளிப்படுத்துகிறான். அவனே இறந்த பூமிகளையும் செழிப்பாக்குகிறான். இவ்வாறே (மரணித்த பின்னர்) மறுமையில் நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.