caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Room அத்தியாயம், வசனம் 21

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 84 · 30:21

وَمِنْ ءَايَٰتِهِۦٓ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًا لِّتَسْكُنُوٓا۟ إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளைப் படைத்தது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். அவர்களிடம் நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக (அவர்களைப் படைத்தான்). உங்களுக்கு மத்தியில் அன்பையும் கருணையையும் அவன் ஏற்படுத்தினான். நிச்சயமாக சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன் உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளை - அவர்களிடம் நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக - படைத்ததும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும், உங்க(ள் இரு குடும்பங்க)ளுக்கு மத்தியில் அன்பையும் கருணையையும் அவன் ஏற்படுத்தினான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi21. நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டு பண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70