إِذْ قَالَتِ ٱلْمَلَٰٓئِكَةُ يَٰمَرْيَمُ إِنَّ ٱللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ٱسْمُهُ ٱلْمَسِيحُ عِيسَى ٱبْنُ مَرْيَمَ وَجِيهًا فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَمِنَ ٱلْمُقَرَّبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம் ஆகும். (அவர்) இம்மை, மறுமையில் கம்பீரமானவராகவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களிலும் இருப்பார்" என்று வானவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif“மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையினால் உமக்கு (ஒரு குழந்தையை கொடுக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம் ஆகும். (அவர்) இந்த உலகத்திலும் மறுமையிலும் கம்பீரமானவராகவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களிலும் இருப்பார்’’ என்று வானவர்கள் கூறிய சமயத்தை (நபியே) நினைவு கூர்வீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi45. (மேலும், மர்யமை நோக்கி) வானவர்கள் ‘‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன் (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான்'' என்றும் ‘‘அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்'' என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' என்றும் கூறினார்கள்.