caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 44

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:44

ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَٰمَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) இவை மறைவான செய்திகளிலிருந்து உள்ளவை. இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். மர்யமை (வளர்க்க) அவர்களில் யார் பொறுப்பேற்பது என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுது கோல்களை (ஆற்றில்) எறிந்தபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கிக்கும்போதும் நீர் அவர்களிடம் இருக்கவில்லை.
Tamil Translation - Omar Sharif(நபியே!) இவை மறைவான செய்திகளிலிருந்து உள்ளவை. இவற்றை உமக்கு வஹ்யி (மூலம்) அறிவிக்கிறோம். அவர்களில் யார் மர்யமை பொறுப்பே(ற்று வள)ர்ப்பார் என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்(து சோதித்)தபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்தபோதும் நீர் அவர்களிடம் இருக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi44. (நபியே!) இவை (அனைத்தும் நீர் அறியாத) மறைவான விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கிறோம். மர்யமை (வளர்க்க) யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுது கோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70